அவன்: நிர்வாணம் கண்ட பின் , உடைகளின் மாயப் புனைவுகளை சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?
அவள்: உனக்குள் என்னை திணிக்க முடியாததால் நம் அனைத்து புணர்ச்சியும் வீழ்ச்சியே..
அவன்: நீ ஆணாகவும் நான் பெண்ணாகவும் மாறும் வித்தை யார் சொல்லித் தருவார்?
அவள்: இது பால் மாற்றம் அல்லவே.. ஈருயிரும் ஓர் ஆன்மாவாக சங்கமிக்கும் சமயம் வருகவே..
புனைவுகள் யாவும் பொய்களே.. மெய்யினை காண்போம்
அவன்: மெய்களை மறைக்கிற உடைகள் உலகத்தை மூடி இருக்கிறதே?"
அவள்: உடைகள் இல்லாமலே இருந்திருந்தால் அது தரிசனம் ஆகி இருக்காது..
மெய்களுக்கு மூடுபொருள் தேவை படுகிறது..
அவன்: பொய்கள் இல்லாமல் மெய்கள் புரிவதில்லை என நீ நம்புவதால், நான் பொய்
சொல்கிறேன் உன்னிடம் ,,நீ ஆணாய் இல்லாததால் என் பொய்களை மெய்யென்றே
நம்புகிறாய்.
அவள்: என்ன பொய் சொன்னாய்?
அவன்: நான் சொன்ன பொய்கள்:நீ ரொம்ப அழகு,நீ தெய்வீகத்தின் சாயல்
நீ சி்ரிக்கையில் நான் மரிக்கிறேன்,இப்படித்தான் ஆண்களின் உலகம் பொய்களைச்
சொல்கிறது நிதமும்
அவள்: பொய்களுக்குள் மெய்களை தேடுவது என் வேலை..பொய்யென தெரிந்தாலும் அதை
மெய்காணவே முயல்கிறேன்..
அவன்: உடைகளைக் களைய முள்ளை முள்ளால் எடுப்பது போல்
அவள்: பொய்களை பொய்யால் எடுக்கிறாயோ?
அவன்: பொய்யெனத்தெரிந்தும் நம்பும் பெண்களின் உலகம்,மெய்யை மறைப்பதையே தன்
ஆயுதம்மாய் ஆக்குகிறதோ?
அவள்: பெண்கள் ஆண்களை பூசாரிகளைப் போலவே எண்ணுகின்றனர் என்பது அவர்களுக்கு
தெரியுமோ?,பொய்களை கொட்டு., அதை உன் வேலையை போல் செய்.. என்
எச்சரிக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியுமா?
யோனிகளை குறிவைப்பதே,, அதனால் தான் அவர்களின் பிறப்புறுப்பின் பெயர் குறி
இப்படி அர்த்தம் இல்லாமல் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது மழை நிஜம்மாய் பெய்யத் தொடங்கியது. பிரவுன் நிற ரம் பொத்தலை திறந்தான்.அதன் நிறமும் வாசமும் அவனை வசீகரித்தது.ரம்மின் வாசம் அவன் நரம்புகளைப் பீடித்த போது நீளம்மாக அவன் முடி வளர்ந்திருப்பதை அவள் பார்த்தாள். அதுவரை அவன் குடிப்பதை எதிர்த்தவள் குடி நல்லா குடி
எனச் சிரித்தாள்.
ஆனால் அவன் வாயில் இருந்து வந்தது வார்த்தைகளே அன்றி வாந்தியல்ல.
ரம் சொன்னது இதுவரை நீ அவளிடம் வார்த்தைகளை வாந்தியாய் எடுத்தாய்
எனவே இப்போது வார்த்தை வருகிறது வாந்தியாய். அவன் வாயில் இருந்து கொ்ட்டிய வார்த்தைகளை கழுவ வரும்மாறு அவளை அழைத்தான் எப்போதும் அவன் வாந்தி எடுக்கும்போது தலையை பிடித்து விடும் அவள்.,இன்று அவ்வாறு செய்யாமல் அவன் எதிரே நின்றாள்.தாங்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது..சீக்கிரம் கழுவி விடு.. வாடை தாங்கவில்லை என்று அவன் சொல்ல அவன் முதன் முதலாய் தன் அசிங்கத்தை உணர்ந்ததால் அது வாசமளிப்பதாக அவள் சொல்கிறாள்..ஆகவே துடப்பத்தை அவன் கையில் கொடுத்து அவனையே அவன் கழிவுகளை கழுவுமாறு சொல்கிறாள்.
தான் அவளிடம் பேசிய பலநாள் வசைமொழிகள் வங்காள் விரிகுடாவாக தனக்கு முன்னால் விரிந்து கிடக்க விழிக்கிறான் அவன். அந்த நாற்றம் எடுத்த வார்த்தைக் கடலை கழுவி விட நீர் எடுக்க கழிப்பறைக்குள் போனான்,அப்போது கொட்டி இருந்த வார்த்தைகள் அவளிடம் சொன்னது,,”கடலை நீரால் கழுவ முடியுமா?” நாற்றத்தில் இருந்து தப்பிக்க நீயும் குடி அந்த ரம்மை “ என்றது
ரம்மை குடித்துவிடுகிறாள்..தொண்டைகுழியில் நின்றுக்கொண்டு அவளுக்கும் முதலில் குமட்டவே செய்தது..மீண்டும் கலைப்பாக மொத்த க்ளாஸ்ஸையும் குடித்து விட.,கன்னியாகுமரி வள்ளுவனை போல் நின்றாள் ஒரு வித ஞானமும்.. பிரமிப்பும் தோன்ற வள்ளுவானாய் அவள் உணர்ந்த போது அவன் கழிப்பறையில் இருந்து வந்தான். நீர் காலி என மிச்ச ரம்மை சுவைத்தான்.அப்படி அவன் சுவைத்த போது அவனின் மார்பகங்கள் அவளுடையதாய் மாறியதைப் பார்த்த அவள் தன் மார்பகம் இல்லாமல் போனதைப் பார்த்து மகிழ்ந்தாள்.வாழ்வு முழுக்க கணத்த மார்பு காணமல் போனது அவளுக்கு உச்ச கட்ட சந்தோஷத்தைத் தர அவன் மார்பை பார்த்துச் சொன்னாள் முன்பு அவன் சொன்ன வார்த்தையை “உன் மார்பு போல் கண்டதில்லை, பெரிதாய் இல்லாமல் சிரிதாய் இல்லாமல் எனக்கே எனக்கென செய்தது போல் என”
ஐயோ.. இரு பெரும் மலைகளை கட்டி இழுப்பது போல் உள்ளது.. கணம் தாங்க முடியவில்லை.. சற்று நேரம் .., போதை தெளியும் வரையிலாவது கழட்டி வைக்க முடியுமா? என்று சொல்ல., அவள் தன் மேலாடைகளை கழுட்டுகிறாள்.. ஒரு சிறு குழந்தையை போல் பூரிப்படைகிறாள்..அவள் மார்பில் சம்பந்தம் இல்லாமல் பனியனைப் போல் தொங்கிய பிராவை கழட்டி அவனிடம் தருகிறாள்
இனி அழுத்தும் உள்ளாடைகள் இன்றி வாழலாம் என்ற உண்மை அவளுக்கு மகிழ்வைத்தர ரம் குடித்தாள் மேலும் ஒரு மிடக்கு
பாவம் என அவனுக்கு அணிவித்த பிராவை அவள் கழட்டும் போது கவனித்தாள்
அவளின் கரங்கள் அவனுடையதாய் இருந்தது.மார்பகங்கள் அவளுக்குப் பிடிக்க அவள் அதனை வருடத் தொடங்கினாள் ரம் மேலும் இறங்க அவளுக்கு அம்மார்பகத்தின் மீது பைத்தியம் கூட மயங்கிய அவனை எழுப்பாமல் அம்மார்பகங்களைச் சுவைக்கத் தொடங்கினாள். இத்தனை காலம் அவள் தந்த மகிழ்வை அவள் பெற்றுக் கொண்டிருந்தாள்.
என்ன சொல்கிறாய் என அவன் வி்ழித்த போது, அவன் அவளின் பாவடையில் துருத்தித் தெரிந்த ஆணிண் குறியைப் பார்த்தான். தன் கால் சராயை வேகமாய் அவிழ்த்தவன் அங்கு யோனி பார்த்து அதிர்ந்து அழத்தொடங்கிய போது அவள் அவனுடைய இதழ்களை தன் இதழ்களால் பொத்தினாள்.
என்ன இது உன் இதழ் இத்தனை முரடாய் என்றான். உன் இதழ் மென்மையாய் இருக்கும் போது பின் என் இதழ் இப்படித் தானே இருக்கும் என்றாள். இந்த உதடைத்தானே நான் இத்தனை நாள் சகித்து சுவைத்தேன் என்றாள்.
உன் இதழ் மென்மையாய் இருக்கும் போது பின் என் இதழ் இப்படித் தானே இருக்கும் என்றாள். இந்த உதடைத்தானே நான் இத்தனை நாள் சகித்து சுவைத்தேன் என்றாள்.உனது மேடுகளிலும் பள்ளங்கலிலும் பார்வைகளால் பயணிக்க பலர் வருவார்கள்..நீ காட்சிபொருளாகப் போகிறாய் அவர்களின் கவனத்தை எப்படி திசை திருப்பலாம் என நான் உனக்குச் சொல்லித் தருகிறேன்,ஓ என்ன அழகு உன் பிருஷ்டம்”,அதனைப் பிசைந்த வாறு சொன்னாள்.நீ என்றாவது என்னை இப்படி பிசைந்திருக்கிறாயா முட்டாள் என்றாள் எதையும் போலவே இதுவும் அவனுக்கு புரியவில்லை..
அவனுக்குப் புரியவில்லை என்பதை அவள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தன் பாவடைய அவிழ்த்து அவனின் குறியை அவனின் வாய்க்குள் திணித்தாள். அய்யோ சுத்தம்மாய் வைத்திருக்க மாட்டாயா?,குமட்டுகிறது என்றான்.என்றாவது நான் உன்னிடம் இதைச் சொல்லியிருக்கிறேனா விவ்ஸத்தைக் கெட்டவனே என்றாள். நெடி தாங்க முடியாமல் அக்கணமே செத்து விடுகிறான்.
செத்து விழுந்தவன் மேல் கொஞ்சம் ரம்மை ஊற்ற உயிர் வருகிறது மீண்டும்.
அவனை பென்ச்சில் சாய்த்து புணரத்தொடங்குகிறாள்.அவன் மேல் இருந்து அவனுள் செல்வது அவளுக்குப் பிடித்திருக்க வேகம் கூட்டுகிறாள். நொடியில் வெளிப்படும் விந்தை அவன் மீது கொட்டுகிறாள். அவள் எழ அய்யோ எனக்கு வரவில்லையே என அவன் புலம்பி மேலும் கேட்க தன் குறி சிறுத்து விட்டதே என்ச் சொல்லி, இரு என தன் கைப்பயைத் திறந்து வைப்ரேட்டரை எடுத்துத் தருகிறாள். ”ஒவ்வொரு இரவும் நீ உறங்கிய பின் எனக்குப் பயன் பட்டது்.இனி உனக்கு.. எனச் சிரித்தாள். அந்த ரகசியம் தாங்க முடியாமல் அவன் அழத் தொடங்கினான்.அவள் மறு நொடி உறங்கிப் போனாள் பிறந்த குழத்தையின் முதல் உறக்கத்தை வாய்க்கப் பெற்றவளாய்......

wonderful...as a women i am so thankful to you for such a bold writing..i also write in feminist approach but mine will be literal frustration spit out..but ur writing is very very poetic..let these male genders be warned...thanks once again...wish u all the best
ReplyDeleteமறுக்கமுடியாத உண்மைகள், கசக்கே செய்யும் எப்போதும்..
ReplyDeleteஉரிக்க உரிக்க வெங்காயம் போல இல்லை.. ஆகவே இன்னும் இன்னும் எழுதுங்கள்..
Great writing. I start reading blogs very recently. I feel great to read these type of expressions.
ReplyDeleteKeep on writing in all the areas.